உயிர் வளரும் கதை - புத்தக பரிந்துரை
புத்தகம் : உயிர் வளரும் கதை
ஆசிரியர் : மேக்னா சுரேஷ்
வெளியீடு : அமேசான் மின்நூல்
சமீபத்தில் ஒரு காலை நேர தேநீர் குடிக்கும் வேளையில் Amazon Kindle கருவியை புரட்டும் போது கண்ணில் பட்ட புத்தகம் தான் உயிர் வளரும் கதை. சிறிய புத்தகம் தான் ஆனால் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்ட புத்தகம்.
சாமானியனுக்கும் புரியும் வகையில் எடுத்துக்காட்டுகளோடு விளக்கி இருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர். ஆங்காங்கே அறிவியல் கலை சொற்கள் தென்படலாம் ஆர்வமில்லாதவர்கள் அந்த சொற்களை மட்டும் தவிர்த்து விட்டு கருப்பொருளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு உயிர் பூத்து வளர்வது எவ்வளவு அழகான அதே சமயம் ஆச்சர்யமான விஷயம் என்பதை கொஞ்சம் யோசிக்க தான் வைத்து விட்டது இந்த குட்டி புத்தகம் . முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இந்த புத்தகத்தை பரிந்துரையுங்கள் , அவர்களுக்குள் நடக்கும் அழகான உருமாற்றங்கள் அவர்களுக்கு ஆச்சர்யங்களோடு ஒரு இதமான உணர்வையும் கொடுக்க கூடும்.
புத்தகம் வாங்க : உயிர் வளரும் கதை