Pravinkoodu Shappu - திரைப்பட அனுபவம்
சமீப காலமாக மலையாள சினிமா மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களுக்கும் அதிகம் பரிட்சையமானவர் பசிஸ் ஜோசப். அவர் நடித்த சமீபத்தில் வெளி வந்த Pravinkoodu Shappu என்னும் டார்க் காமெடி வகையரா திரில்லர் திரைப்படம் Sony Liv ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே மலையாள சினிமா காரர்கள் திரில்லர் படங்களை தரமாகவே கொடுப்பார்கள். அந்த தைரியத்திலும் பசிஸ் ஜோசப் நடிப்பிற்காகவும் பார்த்தேன்.
ஒரு கள்ளுக்கடையில் (சாராய கடையில்) நடந்த கொலையை புலனாய்வு செய்வது தான் கதை. கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் இருந்து விசாரணை தொடங்கும் பிறகு யார் செய்தார்கள் என்று ரகசிய முடிச்சுகளை அவிழ்ப்பதே கிளைமேக்ஸ்.
விசாரணை அதிகாரியாக வரும் பசிஸ் ஜோசப்பின் நடிப்பு டார்க் காமெடி கலந்த ரசிப்பு. பல கோணங்களில் புலன் விசாரணை செய்கிறார் ஒவ்வொரு விசாரணையும் முட்டு சந்தில் போய் நிற்கிறது (முடிவு கிடைக்காமல்)
கொலை செய்ய நாம் அனைவருக்கும் பரிட்சையமான ஒரு விஷயம் பயன்படுத்த படுகிறது. கிளைமேக்ஸ் அருமை!
நம்பி பார்க்கலாம், பெரிதாக எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் அதே சமயம் உங்களை ஏமாற்றவும் செய்யாது!