பிறந்தநாளன்று காணாமல் போவது
"முன்பு ஒருமுறை நண்பன் வீம்புக்காக செய்ததை
நான் ஒருநாள் விரும்பி செய்ய துணிந்தேன்
பிறந்தநாளன்று காணாமல் போவது
அனைத்து நாளையும் போலவே கடந்துவிட்டால்
பிறந்த நாளுக்கென்று என்ன மதிப்பு
தொலைபேசி அணைத்து , மின் கருவிகளை துறந்து
நானென்ற அடையாளமான நானாக
வாகனமற்று , தொலைதூரம் நடந்து
அவசியமில்லாத பேருந்து பயணம் செய்து
முடிந்த அளவு ஈகை செய்து
மீதி நேரம் முழுக்க புடித்த புத்தகத்தில் மூழ்கிக் கிடந்து
சாதாரண செயல்களால் அந்த ஒருநாளை விசேஷமாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்
அந்த வீம்பு நண்பனுக்கு நன்றிகள் "