ஊழல் – உளவு – அரசியல் - புத்தக விமர்சனம்
புத்தகம் : ஊழல் – உளவு – அரசியல்
ஆசிரியர் : சவுக்கு சங்கர்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

மேலோட்டமாக அரசு எந்திரம் , அதிகாரிகள் , அரசியல்வாதிகள் எப்படி என்று ஓரளவுக்கு யூகிக்க முடியும் ஆனால் நமக்கு தெரியாத பல திரைமறைவு செயல்பாடுகள் பற்றி இந்த புத்தகத்தில் படித்தறியும் போது கொஞ்சம் பதற தான் வைக்கிறது.
அரசியல் பற்றிய ஆர்வமுள்ளவர்கள் சவுக்கு சங்கர் பற்றி அநேகமாக அறிந்திருக்க கூடும் . லஞ்ச ஒழிப்பு துறையில் சூழ்நிலை காரணமாக வேளையில் சேர்க்க பட்டு , அங்கிருந்து தொடங்கி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களது ஊழல் வழக்கு தொடங்கி , தான் பணியாற்றிய வழக்குகள் அதன் பின் அதிகாரிகள் செய்த குறுக்கு தனங்கள் , அடக்குமுறைகள் , அயோகியதனங்கள் என நிறைய விஷயங்களை பகிர்ந்துருக்கிறார் .
சாதாரண சாமானியனுக்கு தெரியாத நிறைய ஆச்சர்யமான விஷயங்கள் , நடைமுறைகள் , தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது இந்த புத்தகத்தில் . ஒரு கட்டத்திற்கு மேல் அந்த அதிகார வட்டத்திற்குள் எப்படி சிக்கி கொண்டார் , சிறை அனுபவங்கள் நடைமுறைகள் , நீதிமன்ற அனுபவங்கள் நடைமுறைகள் , எப்படி அனைத்தையும் எதிர்கொண்டார் கடைசியில் வென்றாரா என்பதே புத்தகத்தின் சாராம்சம் .
சுவாரஸ்யமான புத்தகம் , இருந்தாலும் சில இடங்களில் சில நெருடல்களும் உள்ளது , ஆங்காங்கே தி மு க , அ தி மு க இருவரையும் ஒரே தராசில் வைப்பது போல கூறினாலும் , ஜெயலலிதா அவர்களை பற்றி புட்டு புட்டு வைத்தவர் கருணாநிதி அவர்களை பற்றி சில இடங்களில் சம்பிரதாயங்களுக்காக கேள்வி கேட்டாலும் கொஞ்சம் பூனை போல் தடவி குடுப்பது போன்ற எண்ணம் தான் உள்ளது .
அதே போல நிறைய விசாரணை அறிக்கைகளில் தவறான ஜோடிப்புகள் இருந்ததாகவும் அதை தானே தயாரித்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் இவர் , தி மு க ஆட்சியேற்க உள்ள நிலையில் அநியாயத்திற்கு எதிராக பொங்கி எழுந்தது போல் கூறுவது மிகவும் பச்சை யாக தெரிகிறது தி மு க அரசில் இவருக்கு கொஞ்சம் தொடர்புகள் இருந்துள்ளது என்று .
கடைசியாக இந்த புத்தகத்தின் துணை தலைப்பு கண்டிப்பாக இவருக்கு பொருந்தாது (அதிகார வர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் ). அரசு ஊழியரான இவர் நிறைய பெரிய அதிகாரிகளுடன் பழக்கத்தில் இருந்தவர் , பத்திரிகையாளர்கள் வழக்கறிஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என நிறைய கைகள் கொண்டு போராடியவர் எப்படி சாமானியன் ஆனார் என்று புரியவில்லை .
தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய படிந்திருக்கும் புத்தகம் . கண்டிப்பாக வாசிக்கலாம் .
புத்தகம் வாங்க : ஊழல் – உளவு – அரசியல் மின் நூலுக்கு : ஊழல் – உளவு – அரசியல் மின்நூல்