பூமி வெப்பமடைதலை சுலபமாக புரிந்துகொள்வது எப்படி?
உலக வெப்பமயமாதல் என்பது பூமியின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உயர்வதாகும். இது நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற எரிபொருள்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. இவற்றின் பயன்பாடு காற்றில் வெப்பத்தைப் அதிகரிக்கும் வாயுக்களை வெளியிடுகிறது, இது போர்வையைப் போல பூமியில் வெப்பத்தை நிலைத்துக் கொள்ள செய்கிறது. இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது.
சில பகுதிகளில் அதிக வெப்பநிலையையும், சில பகுதிகளில் வறட்சியையும், சில பகுதிகளில் பனிக்கட்டி உருகி நீர்நிலை உயரும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இதை பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்,சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறைகளுக்காகவும், ஆரோக்கியமான பூமியை உறுதி செய்யவும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உலக வெப்பமாதலை தடுக்க உறுதியுடன் எதிர்வினையாற்றவேண்டும்..!!