எல்லா மனுஷங்களும் பொறக்குறோம் உழைப்புக்கு ஏத்த மாதிரி வாழுறோம் அப்புறம் ஒரு நாள் இல்லாம போயிடுறோம். மனுஷன பத்தி சொல்லணும்னா இது தான் short lifecycle story. ஒருத்தர மாதிரி இன்னொருத்தர் வாழ்க்கை இருக்குறது இல்ல. ஆனா களம் எல்லாருக்குமே ஒன்னு தானே , அப்புறம் ஏன் ஒருத்தருக்கு கிடைக்குற வாய்ப்பு இன்னொருத்தருக்கு கிடைக்குறது இல்ல?
வாய்ப்பு எல்லாருக்குமே இருக்கு நாம தான் பயன்படுத்திக்கணும் ன்னு சொல்ற வியாக்கியானம் லாம் நான் நம்புறது இல்ல. காரணம் அந்த வாய்ப்பு கெடைக்கணும்னாலே நமக்கு அப்பாற்பட்ட நிறைய காரணிகள் அதுக்கு தேவைப்படுது. வாய்ப்பு கெடச்சு தோக்குறது கூட பரவலா அது ஒரு பாடம் மாதிரி எடுத்துக்கலாம் ஆனா வாய்ப்பே கிடைக்காம தோக்குறது கஷ்டம் இல்ல , விரக்தியை தான் கொடுக்கும்.
சரி அப்புறம் எப்படி நெறைய பேருக்கு வாய்ப்பு கெடச்சிட்டே இருக்கு , தோத்தா கூட திரும்ப திரும்ப வாய்ப்பு கெடைக்கிது னு பாத்தா. சில pattern தெரிஞ்சிக்க ஆரம்பிச்சன். நமக்கு அப்பாற்பட்ட காரணிகள் ன்னு நான் சொன்னது பணம், சாதி, மதம், பரிந்துரை இன்னும் இன்னபிற விஷயங்கள் ன்னு எடுத்துக்கிட்டா கூட, deep ah யோசிச்சா இது இருக்குற எல்லாருக்கும் வாய்ப்பு கெடைக்குதா ன்னு பாத்தா அதுவும் இல்ல.
இந்த காரணிகளை விலக்கி வெச்சிட்டு இன்னும் deep ah யோசிச்சா, அந்த திரும்ப திரும்ப வாய்ப்பு கெடைச்சவங்க திரும்ப திரும்ப பண்ண ஒரே விஷயம்
வாழ்க்கைக்கு மூலாதாரமான போராட்டம் அல்லது விடாமுயற்சி.
அந்த வாய்ப்பு கெடைச்சவங்க எல்லாருமே ஜெயிக்கிற வரைக்கும் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு அதே உழைப்பை போட்டுட்டே இருந்திருக்காங்க. வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் சொல்வது போல் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான விஷயம்
“ஜெய்கிறோமோ இல்லையோ முதல்ல சண்ட செய்யணும்“
வாய்ப்பு கெடைக்கணும்னா சண்ட செஞ்சிட்டே இருக்கணும், கிடைக்குற வரைக்கும் , கெடைச்சதுக்கு அப்புறமும் , கெடைக்கலனாலும்.