நடிகர் பிருதிவிராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளிவந்து வெற்றிகரமாக பாராட்டப்பட்ட திரைப்படம் தான் லூசிபர், முழுமையான அரசியல் திரில்லர் திரைப்படம். அதன் இரண்டாம் பாகமான எம்புரான் திரைப்படமும் சமீபத்தில் வெளிவந்து நன்றாக வரவேற்பு பெற்றது.
எம்புறான் திரைப்படத்தில் முதல் காட்சியிலேயே ஹிந்து , முஸ்லீம் கலவரம் காட்டப்படும் அதில் முஸ்லிம்கள் எப்படி கொடூரமாக கொல்லப்படுவார்கள் என்பதையும் காண்பிப்பார்கள். முஸ்லீம் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு ஹிந்து பெண்மணி மத மோதல்களை பற்றி இப்படி கூறுவார்.
“இன்னைக்கு நடக்குற இந்த விஷயம் எல்லாம் நம்பிக்கையோ இல்ல மதம் சம்பந்தப்பட்டதோ இல்ல, இது வெறும் அரசியல் விளையாட்டு. நம்ப நாட்ல அரசியல் ஒரு வியாபாரம் அதுக்கு ஹிந்து/ முஸ்லீம் , ஆண்/ பெண் ன்னு எதுவும் தெரியாது அது வழியில வர எல்லாத்தையும் வியாபாரம் பண்ணும்.
மதமும் அரசியலும் கைகோர்ப்பது வெடிமருந்தில் நெருப்பை இறைப்பது போல, இது நம்ப பிள்ளைங்களுக்காவது புரியட்டும் சொல்லிக்குடுங்க“
மொத்த திரைப்படத்தின் கரு இந்த முதல் காட்சி வசனம் தான். அடைக்கலம் கொடுத்த ஹிந்து பெண்மணி உட்பட அனைத்து முஸ்லீம் மக்களும் கொல்லப் படுவார்கள். அதிலிருந்து தப்பித்த ஒரு சிறுவன் மட்டும் பழிவாங்கும் எண்ணத்தோடு பாகிஸ்தானிய தீவிரவாத இயக்கத்தில் போய் அடைக்கலம் புகுவான், அவனுக்கு அனைத்திற்கும் காரணம் இந்தியா என்பது மட்டும் தான் போதிக்கப் படும். இந்த இடத்தில் இரு நாடுகளுடனான அரசியல் பேசப்பட்டிருக்கும்.
பிறகு அந்த சிறுவன் காப்பாற்றப்பட்டு அதே வன்முறை செயல்களை செய்வான் தீவிரவாதத்திற்கும், கடத்தல்களுக்கும் எதிராக. கடைசியில் தங்கள் குடும்பத்தை கொன்று குவித்த அரக்கனையும் பழிதீர்த்து கொன்றுவிடுவான்.
இங்கு ஒரு விஷயங்கள் அவன் தீவிரவாத இயக்கத்தில் இருந்திருந்தாலும் இப்பொழுது போல வேட்டை நாயாக தான் இருந்திருப்பான் அப்பவும் பழி தீர்த்திருக்க முடியும், வழி மாறியதால் அவன் செய்யும் ஒரே விஷயம் தன்னை போல வழி மாறிய யாரும் தவறான பாதையில் போகாமல் தடுக்கும் போராளி ஆனது மட்டுமே.
கேரள அரசியலில் மதவாதம் தலைதூக்காமல் பார்த்துக் கொள்ளும் வேலையை பாரம்பரிய கட்சியின் வாயிலாக செய்வது போல் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். மற்ற அரசியல் குறியீடுகள் பற்றி இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.