Cringe கவிதைகள்!
அவளிடம் சொன்னான்
“உன் தலையில் இருந்து வழியும் கூந்தலில் தேன் வாசம்! “ வருகிறது,
தடவி பார்த்தவள், எதுவும் இல்லையே என்று விழி பிதுங்கினாள்,
“பூக்களின் மேல் தேன் தானே இருக்கும், அந்த வாசம் தான்” என்று சொல்லிவிட்டு காதலோடு ஒரு பார்வை பார்த்தான்,
“யோவ் கிரிஞ்சு (Cringe) மாதிரி பேசிட்டு இருக்க போய் வேலையை பார்” என்றாள்!
“கிரிஞ்சா நானு? “, என்று தலையை சொரிந்தப்படியே அடுத்த கவிதையை தயார் செய்தான் எதற்கும் கலங்காத அந்த வீரன்!