ரயிலில் பாம் வைப்பது , அதை செயலிழக்க வைக்க போராடுவது , பயணிகளை காப்பாற்றுவது , பாமை வைத்தது யார் எதற்காக வைத்தார் கடைசியில் என்ன நடந்தது போன்ற அனைத்து ரயில் படங்களின் வழக்கமான பாணி தான் இந்த திரைப்படமும்.
ஆனால் இங்கு இருக்கும் வித்தியாசம் இது ஹாலிவுட் படமல்ல இது ஜப்பானிய திரைப்படம் அதனால் புல்லட் ரயில், ஜப்பானியர்களின் திட்டமிடல், தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அரசு, அதிகாரிகளின் பொறுப்புணர்வு என்று வித்தியாசங்கள் நிறைய காட்டப்பட்டுள்ளது.
கிளைமாக்ஸ் க்கு முன்பு வரை யார் பாம் வைத்தார்கள் என்பதையே ரகசியமாக கொண்டு சென்றிருப்பார்கள், வழக்கமான ரயில் படம் போல் என்றாலும் ஜப்பானியர்களின் பாணி என்பதால் கொஞ்சம் புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் தான் இருக்கிறது.
Fake Normalcy என்ற பொய்யான விஷயங்களை இயல்பாக்கும் விஷயத்தை trigger point (உந்து விசையாக) ஆக வைத்து இந்த கதைக்கான நியாயத்தை நிறைவு செய்கிறார் இயக்குனர்.
வார இறுதி நாளுக்கான ஸ்வாரசியமான திரைப்படம், Netflix இல் உள்ளது பாருங்கள்!