வணிகமும் வாழ்வும் - புத்தக விமர்சனம்
புத்தகம் : வணிகமும் வாழ்வும்
ஆசிரியர் : G.S.விஜயவர்மன்
வெளியீடு : அமேசான் கிண்டில் (Amazon Kindle)

வணிகமும் வாழ்வும் என்றவுடன் பொருளாதார கோட்பாடுகளை உள்ளடக்கிய கனமான கருத்துக்கள் கொண்ட புத்தகமாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். நம் அன்றாட வாழ்வில் நமக்கு தெரியாமலேயே நம்மை ஏமாற்றும் வணிக நுட்பங்கள் பற்றியும் அதனுடன் கலந்த நம் வாழ்வியலையும் எடுத்துக்கூறும் புத்தகம் இது.
காட்சி விற்பனை முறையில் நாம் எப்படி தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்கிறோம் , அதை செய்ய அவர்கள் என்னென்ன யுத்திகளை கையாளுகிறார்கள். தற்சார்பு வாழ்க்கை முறையை நாம் இழந்ததால் என்னென்ன பொருளாதார சிக்கலில் தவிக்கிறோம் .
சோழர்களின் பொருளாதார பார்வை பற்றிய பகுதி மிகவும் சுவாரஸ்யமான பகுதி , 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர்களிடம் இருந்த பொருளாதார பார்வை மிகவும் பிரமிப்பானது. பிறகு 100 ரூ பொருளை நாம் எப்படி 150ரூ கொடுத்து வாங்கும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.
நம் நாட்டு மூல பொருட்களையே வாங்கி அதை மதிப்பு கூட்டி எப்படி திரும்பவும் நமக்கே விற்கிறார்கள் , கூட்டு நிதியின் பயன்கள் எப்படி நமது வாழ்வில் உபயோகமாக இருக்கும், மதிப்பு கூட்டு பொருட்கள் பற்றி என நிறைய விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது .
மொய் விருந்து , உழவர் சந்தை , பண்டமாற்று முறை என்று நம் வாழ்வியலுடன் கலந்த நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் எளிய நடையில் பகிரப்பட்டுள்ளது . முக்கியமாக நம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் வணிக ஏமாற்றங்கள் பற்றிய நுணுக்கங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நமக்கு அறியாத பல விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தையும் தாண்டி நமது வாழ்வியலை பற்றியும் அதில் சரி செய்ய வேண்டிய அம்சங்கள் பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
மின் நூலுக்கு : வணிகமும் வாழ்வும்